லஞ்சம் வாங்கியபோது வில்லிவாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கைது

சென்னையில் புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ள 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றப்பிரிவு ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் பிரபாகரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்ய குற்றப்பிரிவு ஆய்வாளர் தமிழழகன் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.

 

லஞ்ச பணத்தை அண்ணா நகர் போலீஸ் குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரும்படியும் கூறியுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் தெரிவித்த பிரபாகரன் அறிவுறுத்தலின்படி ஆய்வாளரின் வீட்டிற்கு சென்ற ரசாயனம் தடவிய பணத்தை அளித்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக குற்றப்பிரிவு ஆய்வாளர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply