சாலையோரத்தில் சடலமாக கிடந்த நிறைமாத கர்ப்பிணி …!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையோரமாக நிறைமாத கர்ப்பிணியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த பெண் வசந்தா நகரை சேர்ந்த தினேஷ் குமாரின் மனைவி சுஷ்மிதா என்பது தெரியவந்தது. அதே பகுதியில் உள்ள தன்னுடைய மாமனார் மாமியாரை பார்க்க சென்ற அவர் எவ்வாறு இறந்தார் என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

மேலும் சுஷ்மிதாவின் 5 சவரன் தாலி கொடி மாயமாகி இருப்பதால் அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது 5 மணி நேரத்திற்கு பிறகு அந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. அதனால் கருவிலிருந்த சிசுவும் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Leave a Reply