பள்ளி திறந்து 5 மாதமாகியும் ஒரு மாணவர் கூட புதிதாக சேரவில்லை – சேலம் அருகே தான் இந்த அவலம்

சேலம் அருகே திறந்து ஐந்து மாதங்கள் ஆகியும் அரசு பள்ளியில் ஒரு மாணவர் கூட புதிதாக சேராத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் குழந்தைகளின் கல்வி வசதிக்காக அரசு தொடக்கப்பள்ளி கட்டப்பட்ட நிலையில் இங்கே 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் .

 

ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 14 மாணவர்கள் படித்து வரும் நிலையில், பள்ளி திறந்து 5 மாதங்கள் ஆகியும் ஒருவர்கூட புதிதாக சேராததால் ஒன்றாம் வகுப்பு காலியாக உள்ளது. கட்டிடம் மோசமாக சேதமடைந்துள்ள இந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் சேரவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Leave a Reply