--- --:--:-- --

தீபாவளி பண்டிகை : சிவகாசியில் பட்டாசு விற்பனை ஜோர்

11

தீபாவளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி சிவகாசியில் பட்டாசு வாங்க பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர்.

 

சிவகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிய ரக பட்டாசுகளை அறிமுகப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வகையிலான, சிறுவர்கள் வெடிக்கும் பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பட்டாசுகளை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கேப் சினோ எனப்படும் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற தரை சக்கரம், ஷவரில் தண்ணீர் கொட்டுவது போன்ற தோற்றத்துடன் கூடிய பூந்தொட்டி வகை பட்டாசுகள் சிறுவர்களை கவர்ந்துள்ளன.

 

சிறுவர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலான பட்டாசுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் வானில் 250 அடி உயரம்வரை சென்று 25 அடி சுற்றளவு விரிவடைந்து பல்வேறு வண்ணங்களில் வெடித்து சிதறும் பட்டாசுகள் என அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் பட்டாசுகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon