நலத்திட்டங்களை தடுப்பவர்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் வெற்றி பெற்றதையடுத்து கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்துக்கு வந்த ஜான் குமார், முதல் அமைச்சர் நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் மற்றும் அமைச்சர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, இலவச அரிசி உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு தடையாக இருப்பவர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எனவும் அதற்கு ஆதரவாக செயல்படும் எதிர்க்கட்சிகள் வீடுவீடாக சென்றாலும் மக்கள் அவர்களை ஏற்க மாட்டார்கள் எனவும் கூறினார்.