ப.சிதம்பரத்துக்கு தீபாவளியும் திகார் ஜெயிலில் தான்…!ஜாமீன் மனு மீதான விசாரணை நவ.4-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம் .

 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ந் தேதி சிபிஐ கைது செய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை,கடந்த 16ஆம் தேதி அமலாக்கத் துறையும் கைது செய்தது. இதையடுத்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

 

இந்நிலையில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீன் பெற்றிருந்த ப.சிதம்பரம், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கோரி மனு செய்திருந்தார்.

 

இந்த மனு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், ப.சிதம்பரத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது உடல் எடையும் குறைந்து இருப்பதையும் சுட்டிக்காட்டி, உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் நீதிபதிகளோ, ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனால் தீபாவளிக்கும் வெளியில் வரமுடியாமல், திகார் சிறையில் இருக்க வேண்டிய நிலைக்கு ப.சிதம்பரம் தள்ளப்பட்டுள்ளார்.


Leave a Reply