--- --:--:-- --

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை கொல்ல முயற்சி – இளைஞர் கைது

6

சத்தியமங்கலம் அருகே காதலிக்க மறுத்த இளம் பெண்ணை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

 

சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சசி என்ற இளைஞர், அயலூர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த இரு நாட்களாக ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்பெண் வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தம் வந்துள்ளார். அப்பெண்ணை தடுத்து நிறுத்திய சிவகுமார் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப் படுத்தியுள்ளார்.

 

இதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற சிவகுமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்றார். அப்போது சிவக்குமாரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். காயமுற்ற இளம்பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon