--- --:--:-- --

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 24 மணி நேரமும் மாநகர பேருந்துகள் இயக்கம்

21

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் 24 மணி நேரமும் மாநகர் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

 

வரும் தீபாவளிக்காக, சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக, 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

 

தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழக அரசு சார்பில் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் மூன்று நாட்கள் இயக்கப்படுகிறது. சென்னையைப் பொருத்தவரை மொத்தம் 5 மையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம், கேகே நகர், என மொத்தம் 5 மையங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே அந்த பேருந்து நிலையங்களுக்கு இணைப்பு பேருந்துகள் இயக்குவதற்கு, மாநகர சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. 24 மணி நேரமும் அந்த மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வழக்கமாக இயக்கப்பட கூடிய மாநகர பேருந்துகளுடன் சேர்த்து 110 சிறப்பு பேருந்துகள் இந்த ஐந்து நாட்களுக்கு இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon