--- --:--:-- --

வீட்டில் பேய் விரட்டுவதாகக் கூறி நகைகளை கொள்ளையடித்த பலே தம்பதி கைது

13

ஆந்திராவில் வீட்டில் இருக்கும் பேய்களை விரட்டுவதாக கூறி நகைகளை கொள்ளையடித்த கணவன் மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்தவர் ஷேக் ஹசீனா .இவரை வீட்டில் சந்தித்த ஜமீனுல்லா மற்றும் அவரது மனைவி பாத்திமா ஆகியோர் தான் இந்த நூதன கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். ஷேக் ஹசீனா வீட்டில் பேய் இருப்பதாகவும் அதனை விரட்டி விடுவதாகவும் தம்பதியினர் கூற ஷேக் ஹசீனாவும் அதனை நம்பி உள்ளார்.

 

இதையடுத்து வீட்டிற்குள் சென்ற இருவரும் ஒரு பாட்டிலை காட்டி, அதில் பேயை அடைத்து வைத்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் பேய் தப்பித்து விடாமல் இருக்க பாட்டிலின் மேல் கைகளோ அல்லது கயிற்றால் கட்டவேண்டும் என்றும் கூறி விட்டு நைசாக நழுவியுள்ளனர்.

 

இதன் பிறகு தான் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்துடன் தம்பதி இருவரும் மாயமாகி விட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஷேக் ஹன்னா கடப்பா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜமீனுல்லா மற்றும் பாத்திமா ஆகியோரை கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 190 கிராம் தங்க நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon