தேவாலய வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பாதிரியார்

தேவாலய வளாகத்தில் தங்கியிருந்து பட்ட மேற்படிப்பு படித்து வந்த பாதிரியார் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் மார்ட்டின் சபரியப்பன். பாதிரியாரான மார்ட்டின் சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய வளாகத்தில் உள்ள அறையில் தங்கியிருந்து சென்னை பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். இரவு வழக்கம்போல தூங்கச் சென்ற அவர் காலையில் தேவாலயத்தில் நடைபெறும் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்துள்ளார்.

 

இதனால் சந்தேகமடைந்த சபை பாதிரியார்கள் அவரின் அறைக்கு சென்று பார்த்துள்ளனர் .கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் கதவை தட்டிப் பார்த்து உள்ளனர் .ஆனால் நீண்ட நேரமாகியும் உள்ளே இருந்து எந்த பதிலும் வராததால் மாற்று சாவி மூலம் திறந்து பார்த்தபோது பாதிரியார் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பாதிரியார்கள் வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர் .சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாதிரியார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பாதிரியார் சில நாட்களாகவே யாரிடமும் பேசாமல் மனச்சோர்வுடன் இருந்தது தெரியவந்தது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசாரின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாதிரியார் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் வியாசர்பாடி பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply