பச்சிளம் குழந்தைக்குபாலில் விஷத்தை கலந்து கொன்ற குழந்தையின் பாட்டி

பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடந்து வந்த பெண் சிசுக்கொலை தற்போது மீண்டும் அரங்கேறியுள்ளது பாலில் விஷத்தைக் கலந்து இந்த கொடூரத்தை செய்திருக்கிறார். குழந்தையின் பாட்டி பெண் சிசுக்கொலை பற்றி பேசிய தமிழ் திரைப்படம் 1994 ஆம் ஆண்டு வெளியான கருத்தம்மா எதிரான நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட நிலையில் இந்த படம் வெளியானாலும் சமூகத்தில் இந்த படம் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது.

 

பெண் குழந்தை என்றாலே ஒரு காலத்தில் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் கடந்த காலங்களில் இந்த சிசுக் கொலைகள் நடந்தன. குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசுக் கொலை செய்யும் சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடந்தன. பொதுநல அமைப்புகள் ஆய்வு மேற்கொண்டு உசிலம்பட்டி பகுதியில் கொலைகளையும் கொள்ளைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பிறகு அரசு விழித்துக் கொண்டு சிசு கொலைகளை தடுக்க 1991 ஆம் ஆண்டு தொட்டில் குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

 

மருத்துவமனைகளில் ஸ்கேன் மையங்களை கண்காணிப்பது பெண் சிசு கொலை கொலை செய்தால் கொலை வழக்கு பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் இந்த சம்பவங்கள் கட்டுப்படுத்துவதாக கருதப்பட்டது. பெண் சிசுக்கொலை கொலை செய்யும் கொடூரம் தொடர்ந்து கொண்டே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகனுக்கு இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததற்கு பாலில் விஷம் கொடுத்து குழந்தையை கொலை செய்துள்ளார். பெண்ணொருவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 26 வயதான ராஜா இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும் 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

 

ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து தாயும் குழந்தையும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த செவிலியர் மங்கை மாதந்தோறும் கிராமப்புறங்களுக்கு சென்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது மருத்துவ உதவிகளை செய்வது போன்ற பணிகளை செய்து வந்தார். அதன்படி சத்யாவின் குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார். பின்னர் இரண்டாவது தடவை ஊசி போடுவதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் சத்யா வீட்டிற்கு சென்றுள்ளார் மங்கை ஆனால் குழந்தையை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டதாக கூறியுள்ளார் சத்யா.

 

ஒரு வாரம் கழித்து மீண்டும் சத்யா வீட்டிற்கு சென்ற மங்கை குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என கேட்டுள்ளார் ஆனால் சத்யா சரியாக பதில் சொல்லாமல் மழுப்பலாக பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த செவிலியர் மங்கை தொடர்ந்து விசாரணை நடத்திய போது தமது குழந்தை ஜூலை மாதத்திலேயே மூச்சுத்திணறல் இறந்து விட்டதாக கூறியுள்ளார். சத்யா இதனால் அதிர்ச்சி அடைந்த மங்கை இதுகுறித்து மருத்துவரிடம் பிறப்பித்துள்ளார் பின்னர் மருத்துவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் வீட்டு அருகே உள்ள மலையடிவாரத்தில் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் மருத்துவ குழுவினர் முன்னிலையில் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தினர்.

 

பின்னர் குழந்தையின் உடல் பாகங்கள் குழந்தையின் பாலூட்டி உள்ளிட்டவை ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் பரிசோதனை முடிவுகள் அண்மையில் கிடைத்த நிலையில் குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ராஜாவின் தாயிடம் நடத்திய விசாரணையில் குழந்தைக்கு தாயிடம் நடத்திய விசாரணையில் குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்ததை அவர் ஒத்துக் கொண்டுள்ளார். மகனுக்கு 2வதாகவும் பெண் பிறந்ததால் குழந்தையை கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து உள்ளனர் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.


Leave a Reply