தலைக்கவசத்துடன் வந்து இரு சக்கரம் திருடிய பலே கில்லாடிகள் – சிசிடிவி காட்சிகள்

சேலம் மாவட்டம் ஓமலூரில் தலைக்கவசம் அணிந்தபடி வந்த இரண்டு பேர், ஒரு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்வதும் தொடர்கதையாகி விட்டது.இரு நாட்களுக்கு முன்பு ராதிகா என்பவரிடம் 6 சவரன் நகை பறிக்கப்பட்டது. இத்தகைய கைவரிசையை காட்டியது தலைக்கவசம் அணிந்த 2 நபர்கள் தான் என்பது தெரிய வந்துள்ளது .

 

இவர்கள் பிறப்பால் இரட்டையர்களா என தெரியவில்லை. ஆனால் திருட்டால் இரட்டையர்கள் ஆகிவிட்டனர். ஓமலூரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தலைக்கவசம் அணிந்து நுழைந்த இருவரும் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தலைக்கவசம் அணிந்தபடி பகலில் பெண்களை மிரட்டி வழிப்பறி செய்வது, இரவில் இரு சக்கர வாகனங்களை திருடுவது என இவர்கள் ஈடுபட்டுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தலைக்கவசம் அணிவது கட்டாயம் என காவல்துறை கூறியதை இந்த இருவரும் தவறாக புரிந்து கொண்டார்களோ என்னமோ?


Leave a Reply