செய்திகளுக்கு பிரத்தியேக பிரிவை பேஸ்புக் அறிமுகம் செய்தது!

செய்திகளுக்கு என்று பிரத்தியேக பிரிவை பேஸ்புக் அறிமுகம் செய்ய உள்ளது இதற்காக உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வானொலியை தவிர 1990கள் வரை நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள அடுத்த நாள் காலையில் வரும் நாள் எடுப்பதற்காக மக்கள் காத்துக் கொண்டிருந்தனர். பின்னர் செய்தி தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் என்று வந்த செய்தி துறை என்று முழுக்க முழுக்க இணைய மயமாகி விட்டது ஒரு செய்தி ஒரே நொடியில் மில்லியன் கணக்கான மக்களின் கைகளில் உடனடியாக சென்று விழுந்து விடுகிறது.

 

முழுவதும் காரணம் சமூக வலைதளங்களின் பயன்பாடு தான் சமூக வலைதளங்களில் இந்த அபரிமிதமான வளர்ச்சியை தொலைக்காட்சிகளில் செய்தி நேரத்திற்காக காற்று இருந்தவர்களை செல்போனை நோக்கி ஓட வைத்துள்ளது. அதிலும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகள் எளிதில் மக்களைச் அடைந்து விடுகின்றன ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி கொள்ள புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் நம்பகமான செய்திகளை பெறவும் உலகெங்கிலுமுள்ள ஊடகவியலாளர்கள் தங்கள் முக்கியமான செய்திகளை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது நோக்கமாகக் கொண்டு புதிய செய்தி பிரிவை அறிமுகம் செய்வதுதான் அந்த புது முயற்சி.

 

செய்திகளை நம்பகத்தன்மையை உறுதி செய்ய உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் செய்தியை வெளியிட விரும்பும் நிறுவனங்கள் மக்களுடன் நேரடி உறவை ஏற்படுத்த இந்த புதிய வசதியை உதவும் மேலும் அதன் உண்மைத்தன்மை உயர் தரமாக இருப்பதையும் இந்த புது வசதி உறுதி செய்கிறது.

 

பயனாளிகளுக்கு எந்த வகையிலான செய்திகள் தேவைப்படுகின்றன என்பதை செயற்கை நுண்ணறிவு மற்றும் இதற்கென சிறப்பாக நியமிக்கப்பட உள்ள செய்தி ஆசிரியர்கள் தீர்மானம் செய்வார்கள் செய்தி சேனல்களில் வரும் தலைப்பு செய்திகளை போலவே 10 முக்கிய தலைப்புச் செய்திகளை கொண்ட ஒரு பகுதி இங்கு பிரதானமாக இருக்கும் இனி மக்கள் செய்திகளை தெரிந்துகொள்ள தொலைக்காட்சி யூடியூப் செய்தி நிறுவனங்களின் ஃபேஸ்புக் பக்கங்களை தேட வேண்டியதில்லை பேஸ்புக் செய்தி சேவையின் மூலமாக பேஸ்புக்கை இனி நமக்கு செய்தி வாசிக்க போகிறது.

 

இலவசமாக வழங்கப்பட உள்ள இந்த சேவைக்காக சுமார் 30 லட்சம் டாலர் பணத்தை முதலீடு செய்திருக்கிறது. ஃபேஸ்புக் செய்திகளை வழங்கும் நிதி நிறுவனங்களுக்கும் ஃபேஸ்புக் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வழங்க உள்ளது. செய்தி சேனல்களில் பார்த்து தங்களை அப்டேட் செய்து கொண்டு சமூகம் இனிமேல் பேஸ்புக்ல செய்திகளை பார்த்து கேட்டு தெரிந்து கொள்ளப் போகிறார்கள்.


Leave a Reply