நாய்க்கடி சிகிச்சைக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்; வழியில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு…!
நாய் கடித்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லப் பட்ட சிறுவன், வழியில், வங்கி ஒன்றின் பெயர் பலகையில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் கடலூரில் அச்சிறுவனின் குடும்பத்தை கதறச் செய்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரைச் சேர்ந்தவர் ராமதாஸ் .இவருடைய மகன் மகன் தினேஷ் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான்.படிப்போ நிரந்தர வேலையில்லாத தன் குடும்பத்தை படித்து நல்ல நிலைக்கு மகன் கொண்டு வருவான் என தினேசின் பெற்றோர் பெரிதும் நம்பிக்கையுடன் மகனை படிக்க வைத்து வந்தனர். இரு தினங்களுக்கு முன்பு தினேஷை நாய் கடித்து உள்ளது.
இதனால் ஊசி போடுவதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அப்போது சாலையில் வைக்கப்பட்டு இருந்த தனியார் வங்கி ஒன்றின் பெயர்ப் பலகை சிறுவன் தினேசின் உயிருக்கு எமனாக அமைந்து விட்டது.சாலையோரத்தில் இருந்த சிண்டிகேட் வங்கியின் பெயர் பலகையில் இருந்த மின்னிணைப்பு தினேஷின் குடும்பத்தை மீளமுடியாத இருளில் தள்ளிவிட்டது.
வங்கியின் பெயர்ப் பலகையில் இருந்து கசிந்த மின்சாரம் தினேஷின் மீது பாய்ந்ததில் அவன் உயிரிழந்து விட்டான். தினேஷின் உயிரிழப்புக்குக் காரணமான வங்கியின் அலட்சியத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மேலும் சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




