உயரத்தையும் தலைமுடியையும் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளேன்

தனது முடியையும் உயரத்தையும் வைத்து கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநர் பதவி ஏற்பதன் மூலம் கபடி கொடுத்துள்ளதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவர் மத்தியில் அவர் உரையாற்றினார். அரசியல் கட்சியில் சேர்ந்து விட்டால் டாக்டர் பட்டம் பெற்று விடலாம் என்று இன்றைய இளைஞர்கள் நினைப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

அவர்கள் கடினமான உழைப்பால் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் என்றும் அவர் கூறினார். பிறர் செய்வதை எண்ணி கவலைப்படாமல் தடைகளைத் தாண்டி குறிக்கோளை நோக்கிய மாணவர்கள் பயணிக்க வேண்டும் எனவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


Leave a Reply