தமிழகம், புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் அடுத்த நான்கு தினங்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல துணைத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

 

மத்திய கிழக்கு கடலில் சூறைக்காற்று வீசுவதால் கேரளா மற்றும் கர்நாடக மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


Leave a Reply