மும்பை தொடர் தாக்குதலை தொடர்ந்து காங்கிரஸ் அரசு செயல்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார் மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது எல்லை தாண்டி வந்தவர்கள் தான் மும்பை தாக்குதலை அரங்கேற்றி அவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருந்த போதிலும் இந்தியாவில் இருந்தவர்கள்தான் தாக்குதலை நடத்தினார்கள் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறியதாக பிரதமர் மோடி சாடினார்.மும்பை வாய்ப்புகளின் பெருநகரம் என வர்ணித்த பிரதமர் மகாராஷ்டிராவில் முதல்வர் ஐந்தாண்டுகள் நிலையான ஆட்சியை தந்ததாக பாராட்டினார்.
முந்தைய காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு போலல்லாமல் மும்பையின் வளர்ச்சியில் கவனம் செலுத்தியதாக மோடி குறிப்பிட்டார். பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் மீது எந்தவித தவறும் இல்லை என்று பெருமிதத்துடன் அவர் கூறினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற சிவசேனா தலைவர் அவரை தனது இளைய சகோதரர் என்று மோடி வர்ணித்தார்.