--- --:--:-- --

காப்பியடித்த 41 மருத்துவ மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத உத்தரவு

5

நீட் ஆள்மாறாட்டம் முறைகேட்டில் இருந்து மீள்வதற்குள் ஆகவே தனியார் மருத்துவ கல்லூரிகளில் கண்காணிப்பாளர் உதவியுடன் மாணவர்கள் தேர்வில் காப்பி அடித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பருவ தேர்வில் முறைகேடு செய்ததாக 2 தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் எழுதிய தேர்வு செல்லாது என டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 

கல்லூரிகளிலும் கண்காணிப்பாளரின் உதவியுடன் மாணவர்கள் தேர்வில் காப்பியடித்த சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர்கள் ஒருவருக்கொருவர் விடைத்தாள்களை பரிமாறிக் கொள்வது விடைகளை நகலெடுத்து எழுதியது போன்றவை சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அந்தந்த கல்லூரி வளாகத்திலேயே தேர்வுகளை நடத்த தடைவிதித்து.

 

தேர்வில் காப்பியடித்த 41 மாணவர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த தேர்வை மீண்டும் எழுதவேண்டும் என்றும் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon