கருக்கலைப்பு அனந்தி மீண்டும் சிக்கினார்
திருவண்ணாமலை பொன்னுசாமி நகரைச் சேர்ந்த 51 வயதான ஆனந்தியும் அவரது கணவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 4 பேர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். மூன்றாவது முறையாக கைதாகி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த ஆனந்தி ஆறு மாதங்களுக்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் அவர் சில மாதங்களிலேயே விழுப்புரம் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு சென்று கருக்கலைப்பு செய்து வருவது உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து நேற்று ஆனந்தி மற்றும் அவரது உறவினரான நவீன் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் 12 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது அதில் கள்ளக்குறிச்சியில் வாடகை வீட்டில் தங்கி கருக்கலைப்பு செய்து வந்தது தெரியவந்தது.
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஆனந்தி பெண்களுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்ட அவர் கருக்கலைப்பை தொடர்ந்ததால் 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




