கடலூர் மத்திய சிறைச்சாலையில் போலீசார் திடீர் சோதனை

கடலூரில் உள்ள மத்திய சிறையில் சிறைத்துறை டிஐஜி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடலூர் அருகே உள்ள மத்திய சிறைச்சாலை உள்ளது இந்த சிறைச்சாலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

சிறைச்சாலையில் கஞ்சா போன்ற தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் ஆயுதங்கள் செல்போன் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி தலைமையில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் காவல் ஆய்வாளர்கள் ஆயுதப்படை போலீசார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.


Leave a Reply