சிங்காநல்லூரில் உள்ள ரயில் சுரங்கப் பாதையில் இடுபலக மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி உட்பட்ட கிராமத்திற்கு செல்லும் வழியில் இருப்புப்பாதை அமைந்துள்ளது. எனவே அதனை கடப்பதற்காக அங்கு சுரங்கபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் பெய்து வரும் மழையால் அந்த சுரங்க பாதையில் இடுப்பிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. சுரங்கப்பாதையின் பக்கவாட்டுச் சுவரில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறது இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோர் அலுவலகம் செல்வோர் உள்ளிட்டவர்களுக்கு இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






