கோவையில் தாய்,மகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

கோவையில் கணவரை இழந்து பெற்றோருடன் வசித்து வந்த பின்னும் அவரது 5 வயது மகளும் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை ஸ்ரீ காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் வேதவள்ளி என்பவரின் கணவர் கண்ணன் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

 

இதனையடுத்து கடந்த ஆறு மாதங்களாக தமது பெற்றோருடன் வேதவள்ளி வசித்து வந்துள்ளார் இந்த நிலையில் நேற்றிரவு வேதவள்ளி ஐந்து வயது மகள் கார்குழலி உடல்நிலை சரியில்லை என கூறி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை சோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வீட்டிற்கு சென்றபோது அங்கு சிறுமியின் தாய் வேதவல்லி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தாய் மற்றும் மகள் உயிரிழப்பு தொடர்பாக வேத வள்ளியின் தந்தை ராமகிருஷ்ணன் தம்பி மாதவன் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply