விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு பகுதியில் பூட்டிய வீட்டிற்குள் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதினா பாளையத்தில் வசித்து வந்த சுந்தரமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மூன்று நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. மேலும் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
தகவலறிந்து நிகழ்வுக்கு சென்ற காவல்துறையினர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுந்தரமூர்த்தி அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன. கடன் பிரச்சினை காரணமாக நஞ்சருந்தி சுந்தரமூர்த்தி குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.






