வங்கியின் பெயர் பலகையை தொட்ட சிறுவன்! மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே வங்கி பெயர் பலகையில் இருந்து மின் கசிவு ஏற்பட்டதால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை அருகே கருவாச்சி பாளையத்தில் உள்ள வங்கியில் முன் பெயர் பலகை இருந்துள்ளது. அந்த பெயர் பலகையில் மின் கசிவு இருந்து உள்ளது.

 

இதனை அறியாத அந்த பகுதியை சேர்ந்த ராமு என்ற சிறுவன் பெயர் பலகையை தாங்கி நின்ற இரும்பு குழாயை தொட்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர் விபத்துக்கு காரணமான பெயர்ப்பலகையை காவல்துறையினர் உடனடியாக அப்புறப்படுத்தினர்.


Leave a Reply