--- --:--:-- --

வங்கியின் சுவற்றை உடைக்க முயன்று தோற்றுப்போன கொள்ளையன்

2

திருவள்ளூர் மாவட்டம் புதூர் மேட்டில் உள்ள தொடக்க கல்வி வேளாண் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கிராம மக்கள் வங்கி செயலாளருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து விரைந்து சென்று ஊழியர்கள் வங்கி நடத்திய ஆய்வில் 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை பத்திரமாக இருப்பது தெரியவந்தது.

 

இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன நள்ளிரவில் வங்கியின் முன் பக்க கதவை உடைத்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கதவின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் நகைகள் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியாததால் வங்கியின் பின்பக்க சுவரில் துளை இட முயன்றுள்ளனர்.

 

அதிலும் தோல்வி அடைந்த அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர் இந்த கொலை முயற்சி குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் ஆர்கே பேட்டை காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon