கல்கி ஆசிரமத்தில் 88 கிலோ தங்கம் பறிமுதல்
ஆசிரமத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் 43 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து நாடு முழுவதும் கல்கி பகவான் ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். ஆந்திர மாநிலத்தில் ஒரு பகுதியில் கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்கி பகவானின் மகன் கிருஷ்ணாவின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் கல்கி ஆசிரமம் மற்றும் மத நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 26 கோடி ரூபாய் மதிப்புள்ள 88 கிலோ தங்கம் 43 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் இரண்டரை மில்லியன் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்துள்ளதாக வருமானவரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




