--- --:--:-- --

சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்..! தீவிர வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள்

index

அரசியல் கட்சியினர் அனல்பறக்கும் பரப்புரையால் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் மு தமிழ்ச்செல்வனை ஆதரித்து விரட்டிகுப்பம் அன்னியூர் உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் திமுக காங்கிரஸ் கட்சியினர் தான் ஊழல் வழக்கில் சிறை சென்று தாக்கி தெரிவித்தார்.

 

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆதரவு திரட்டினார். விக்ரவாண்டி பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாற்றுப் பொருளாதாரம் வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் அரசிடம் இல்லை என கூறினார்.

 

இதேபோல் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். சனிக்கிழமை மாலையுடன் இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பரப்புகிறது திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon