--- --:--:-- --

2 ஆண்டுகளில் 872 குழந்தைகள் பலி

images

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 872 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளன. தென் மாவட்டங்களில் மிகவும் முக்கியமான மருத்துவமனையாக விளங்கக்கூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேர் கால மற்றும் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை சிறப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை கர்ப்பிணிப்பெண்கள் அனுமதிக்கப்பட்டனர் என்பதும் அதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதும் மேரி என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். அதேபோல் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிறந்து சில நாட்களே ஆன நிலையில் எத்தனை குழந்தைகள் உயிரிழந்தன எனவும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டிருந்தார்.

 

அதற்கு கடந்த 2014ஆம் ஆண்டு 463 குழந்தைகளும் 2018 ஆம் ஆண்டு 409 குழந்தைகளும் என மொத்தம் 872 குழந்தைகள் உயிரிழந்ததாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது அதேபோல் கடந்த 2017 ஆம் ஆண்டு சுமார் 24 ஆயிரத்து 78 கர்ப்பிணிகளும் 2018ஆம் ஆண்டு 22 ஆயிரத்து 375 கர்ப்பிணிகளும் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களின் சிகிச்சை பலனின்றி மொத்தம் 136 கர்ப்பிணிகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon