தீபாவளிக்கு மதுரை மாவட்டத்தில் அதிகாலை 2 மணி வரை கடைகளை திறந்து வைக்க அனுமதி

தீபாவளிக்கு மதுரை மாவட்டத்தில் 2 மணிவரை கடைகளை திறந்து வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தீபாவளி வணிகத்துக்காக 25 26ம் தேதிகளில் இரவிலும் கடைகள் திறந்திருக்கும் அனுமதி கோரிய மனு மீது உத்தரவு வெளியாகியுள்ளது வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு முந்திய இரு நாட்களும் மதுரை மாவட்டத்தில் அதிகாலை 2 மணி முதல் கடை செயல்பட யூசுப் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

 

அதில் இந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு ஏராளமான வியாபாரிகள் வட்டிக்கு கடன் பெற்று ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்ய மதுரை தூங்கா நகரம் என்பதாலும் தீபாவளிக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை என்பதாலும் கூலித் தொழிலாளிகள் பல மாவட்டங்களில் பணியாற்றும் பலரும் அந்த இரு நாட்களும் மதுரை வந்து பொருட்களை வாங்கிச் செல்வர்.

 

குறிப்பாக மதுரையைச் சுற்றிய சிவகங்கை திண்டுக்கல் தேனி விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மதுரைக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்வார். எனவே வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு முந்தைய 7 நாட்களும் மதுரை மாவட்டத்தில் இரவு முழுவதும் கடைகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இதனால் தீபாவளிக்கு மதுரை மாவட்டத்தில் இரவு 2 மணி வரை கடைகளை திறந்து வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


Leave a Reply