விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படத்தின் கதை திருட்டு வழக்கு

அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள பிக் ஐ திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் செல்வா தொடுத்துள்ள வழக்கை உயர் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. விஜய் நடித்துள்ள இந்த திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். ஆனால் இந்த படத்தின் கதை தன்னுடையது என்று கடந்த ஒரு வாரமாக கேபி செல்வா என்ற உதவி இயக்குனர் போராடி வருகிறார்.

 

மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அட்லி மற்றும் எய்ட்ஸ் நிறுவனத்தின் தரப்பிற்கு ஆதாரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஒருநாள் அவகாசம் கொடுத்தது. இதையடுத்து அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது ஆனால் அட்லி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனக்கு வேறு சில வழக்குகள் இருப்பதால் இந்த வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

 

ஆனால் அவ்வளவு கால அவகாசம் கொடுக்க முடியாது என கூறிய நீதிபதி ஒரு நாள் மட்டும் அவகாசம் கொடுத்தார். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக வாதாடுவதற்கு தரப்பு வழக்கறிஞர் ஒப்புக்கொண்டார் இதனால் திகில் கதை தொடர்பான வழக்கு நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Leave a Reply