தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை…! – மிதாலி ராஜ் பதிலடி

நமக்கு தமிழ் தெரியாது என பதிவிட்ட ரசிகர் ஒருவருக்கு தமிழிலேயே பதில் அளித்து இந்திய கிரிக்கெட் பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தென் ஆப்பிரிக்க பெண்கள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்து சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அவரின் பதிலுக்கு பதில் அளித்து பதிவிட்ட பெண் ஒருவரும், மிதாலிக்கு ஆங்கிலம் தெலுங்கு ஹிந்தி தெரியும் ஆனால் தமிழ் மட்டும் தெரியாது என்று பதிவிட்டு இருந்தார். அந்த பெண்ணுக்கு பதிலளித்த மிதாலிராஜ் தமிழ் தன் தாய் மொழி என்றும் தமிழ் நன்றாக பேசுவேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் தமிழனாய் வாழ்வது தனக்கு பெருமை என குறிப்பிட்டுள்ளமை தாலி தான் இந்தியன் என்பதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.


Leave a Reply