பேய் ஓட்டுவதாகக் கூறி இளம்பெண்ணைச் சவுக்கால் அடிக்கும் பூசாரி

கர்நாடகாவில் பேய் ஓட்டுவதாக கூறி இளம்பெண்ணை பூசாரி சவுக்கால் அடிக்கும் காட்சி நெஞ்சை பதைபதைக்க செய்கிறது. கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியில் ஆபாடி என்ற கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த கொடுமை அரங்கேறியுள்ளது. இங்கு பணிபுரியும் மல்லிகார்ஜுன் என்று பூசாரி பேய் ஓட்டுவதாக கூறி இளம்பெண் ஒருவரை சரமாரியாக அடித்துள்ளார்.

 

இளம்பெண் வலியால் அலறி பிடித்தும் கூட மல்லிகார்ஜுனன் தொடர்ந்து சவுக்கால் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இதனை பார்க்கும் பலரும் மூட நம்பிக்கை என்ற பெயரில் இதுபோன்ற இழைக்கப்படும் அநீதிகளை தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply