பேருந்தில் இருந்து வெளியே விழுந்த பெண்! பதறவைக்கும் காட்சி
குமாரபாளையம் அருகே அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்து கழிவுநீர் கால்வாயில் விழுந்து பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை ஒன்பதரை மணி அளவில் அன்னை சத்யா நகர் பகுதியில் இருந்து கோகிலா என்ற பெண் 55 வயது மதிக்கத்தக்க பெண் பேருந்தில் ஏறியுள்ளார். வரும் படிகள் டிக்கெட் எடுப்பதற்காக கண்டக்டரிடம் படிக்கட்டில் நின்றுள்ளார் டிக்கெட் எடுப்பதற்காக ஒரு கையை விட்டு டிக்கெட் எடுக்கும் பொழுது அந்த நேரத்தில் பேருந்து ஓட்டுனர் அந்த வளைவில் வேகமாக பேருந்து இயக்கியுள்ளார்.
அந்த சமயத்தில் பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்த அந்த பெண்மணி சரிந்து கால்வாயில் விழுந்துள்ளார். இந்த சிசிடிவி காட்சி வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்ததன் காரணமாக அவருக்கு எதுவும் ஆபத்து இல்லை. பெரிய விபத்தில் இருந்து உயிர் தப்பி குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




