ஆவின் லாரி உரிமையாளர் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

புதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி ஆவின் லாரி உரிமையாளர்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 50 ஒப்பந்ததாரர்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆவின்பால் லாரிகள் இயங்கிவருகின்றன. ஆவின் பால் லாரி களுக்கான ஒப்பந்தம் கடந்த 2018 ஆம் ஆண்டுடன் நிறைவு பெற்றது.

 

புதிய ஒப்பந்தம் தொடர்பாக பால் லாரி உரிமையாளர் சங்கத்தினர் உடன் ஆவின் மண்டல மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார் இந்த பேச்சுவார்த்தை சுமூகமான முடிவு எட்டப்பட்டது. எடுத்து ஆவின் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர். முறையாக புதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 20 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply