சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மெட்ராஸ் எனப்படும் இளஞ்சிவப்பு கண் நோய் பரவி வருவதாக எழும்பூர் அரசு மருத்துவமனையில் கண் மருத்துவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார். பருவமழை காலங்களில் ஏற்படக்கூடிய தொற்று நோய்களில் ஒன்றான மெட்ராசை பாதிக்கப்பட்டு தினமும் 15 முதல் 20 பேர் எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறியுள்ள ராஜசேகர் அவரவர் தனித்தனியே கைக்குட்டைகள், கைகளை சுத்தமாக வைத்திருத்தல் போன்றவற்றை கடைபிடித்தால் தொற்றுநோய் பரவுவதை தடுக்க முடியும் என அறிவுறுத்தினார்.
சென்னையில் பரவி வரும் ‘மெட்ராஸ் ஐ’…!
