சமூகவலைதளங்களில் உடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடக் கோரி தொடுக்கப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஃபேஸ்புக் வாட்ஸ்அப் டிவிட்டர் போன்றவற்றில் தனிமனித அவர்கள் பரப்பப்படுவது இது போன்ற சமூக வலைதள கணக்குகளை தொடங்க ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்க வேண்டும் எனக்கூறி அஸ்வினி என்பவர் வழக்கு தொடுத்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு உயர் நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது எல்லாவற்றிற்கும் உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார்கள் என நீதிபதி கேள்வி எழுப்பியதை அடுத்து தனது மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் உயர் நீதிமன்றத்தை அணுக அனுமதி அளிக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் மனுவை திரும்பப் பெற அனுமதியளித்தது.