பீகார் மாநிலத்தில் 100 அடி உயர ராட்சத ராட்டினத்தில் இருந்தபடி செல்பி எடுத்த பின் ஒருவர் கீழே விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. செல்பி மோகத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன அந்த வகையில் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை துர்கா பூஜை கொண்டாடப்பட்டது.
அன்றிரவு பூங்காவிற்கு சென்ற பெண்ணொருவர் நூறடி ராட்சத ராட்டினத்தில் ஏறி சுற்றி உள்ளார் அப்போது ராட்டினத்தில் இருந்த படி அந்த பெண் செல்பி எடுக்க முயற்சித்துள்ளார். அந்தப் பெண் செல்பி எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ராட்டினத்தை பிடிக்காமல் விட்டு விடவே மேலிருந்து தவறி கீழே விழுந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
ரூ.5 லட்சம் வரை யுபிஐ பரிவர்த்தனைக்கு அனுமதி!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு..!
இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம்.. வெளியுறவுத்துறை வெளியிட்ட தகவல்..!
மத்திய அமைச்சரவையில் மாற்றம்..!
சரக்கு ஆட்டோ மீது அதிவேகமாக மோதிய பைக் விபத்து..!
புயல் பாதிப்பு ரூ.1,011 கோடி ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடி உத்தரவு..!