தேனி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்தார் அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த திருமால் என்ற மாணவருக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையே வகுப்பறையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரது கழுத்தை மற்றொருவர் பிடித்து இழுத்தவாறு சண்டை விட்டதாக கூறப்படுகிறது.
இந்த மோதலில் திருமால் மயக்கம் அடைந்துள்ளார். மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இறப்புக்கு காரணமான தாக காணப்படும் மற்றொரு மாணவரை கைது செய்யக்கோரி உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அவர்களில் சிலரை கைது செய்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மோதலில் ஈடுபட்ட மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.