16 வயது பெண்ணை ஆசைவார்த்தைக்கூறி இளைஞர் கடத்தியதாக கூறப்படும் வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்றதாக கூறப்படும் வழக்கில் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் கடற்கரை கிராமத்தில் 16 வயதான பள்ளி மாணவியை அதே ஊரைச் சேர்ந்த ஜான் என்ற இளைஞர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

 

இது குறித்து அப்பெண்ணின் பெற்றோர் கடந்த மார்ச் மாதம் அளித்த புகாரையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் மேலும் தலைமறைவாக உள்ள ஜானை 5 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த நிலையில் மகளை மீட்டுத் தரக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பெண்ணின் பெற்றோர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

 

இதைத்தொடர்ந்து ஜானி நண்பர்கள் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இதனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து உள்ளனர். மேலும் அவரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.


Leave a Reply