--- --:--:-- --

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பங்கள்

download (3)

திருச்சி லலிதா ஜுவல்லரி கல் கொள்ளையடிக்கப்பட்ட 11 கிலோ தங்க நகைகள் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை புதைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லலிதா ஜூவல்லரி கொலை வழக்கில் தேடப்பட்ட திருவாரூர் முருகன் பெருவழக்காக பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார் கர்நாடகாவில் கொள்ளையடித்த நகைகளை மறைத்து வைத்திருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதாக விசாரணையில் முருகன் ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

 

அவர் கொடுத்த தகவலின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்திற்கு திருவாரூர் முருகனை போலீசார் அழைத்து வந்தனர். அவர் அடையாளம் காட்டிய இடத்தில் தோன்றியபோது மண்ணுக்குள் கிலோ கணக்கில் தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நகைகளை கைப்பற்றிய பெங்களூர் காவலர்கள் தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் கர்நாடகாவிற்கு புறப்பட்டனர்.

இதனை அறிவு தனி படை காவலர்கள் சினிமா பாணியில் விரட்டிச் சென்று அவர்களை மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்த விசாரணையில் வேப்பந்தட்டை கைப்பற்றப்பட்ட நகைகளை சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக திருவாரூர் முருகன் மற்றும் கர்நாடக காவலர்களிடம் தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon