எலியால் ரயில்வேக்கு வந்த சோதனை

எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் மான்ஸ்டர் இதில் எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர் இப்படத்தின் முக்கிய கருவாக இடம்பெற்ற எலியால் எஸ் ஜே சூர்யா படும்பாடு அனைவராலும் மிகவும் ரசிக்கப்பட்டது. படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில் எலியைப் பார்த்து அனுதாபப் விடுவதா அல்லது எஸ் ஜே சூர்யா வை பார்த்து அனுதாபப் படுவதா என்று குழப்பம் ஏற்படும்.

 

. இந்த குழப்பம் தற்போது தென்னக ரயில்வே துறை மீதும் ஏற்பட்டுள்ளது தென்னக ரயில்வே மண்டலங்களில் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அதேபோல் பல சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன ரயில்கள் மூலம் பல மாநிலங்களுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன ரயில்வே துறை ஏற்கனவே தனியார் மயமாக்கப்பட்ட இருப்பதாகவும் இதனால் பல ஊழியர்கள் வேலை இழக்க நேரிடலாம் என்று கூறப்படும் இந்த சூழ்நிலையில் தென்னக ரயில்வே தற்போது ஒரு புதிய சிக்கலில் சிக்கி தவித்து வருகிறது.

 

அந்த சிக்கல் என்னவென்றால் அதுதான் எலித்தொல்லை கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்வியின் அடிப்படையில் தென்னக ரயில்வே அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் தற்போது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை மட்டும் 2536 அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் செங்கல்பட்டு சந்திப்பு தாம்பரம் ஜோலார்பேட்டை சந்திப்புகளில் மட்டும் 1715 எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் ரயில்வே பயிற்சி மையங்களில் இருந்து 921 எலிகள் பிடிக்கப்பட்டு உள்ளதாகவும் கடந்த 3 வருடங்களில் மட்டும் சென்னை ரயில்வே எலிகளை பிடிக்க 5.8 9 கோடி செலவில் உள்ளதாகவும் கூறியுள்ளது. இதில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஒரு எலியை பிடிக்க மட்டும் தென்னக ரயில்வே ரூபாய் 22 ஆயிரத்து 330 4 ரூபாய் செலவழித்து உள்ளது. ஏற்கனவே ரயில்வே துறை பல பிரச்சனைகளை சந்தித்து வரும் சூழலில் இது எளிதில் சிலையை எப்படி சமாளிப்பது என்று அதிகாரிகள் திணறி வருவதாக சொல்லப்படுகிறது.


Leave a Reply