நேருவின் குடும்பம் குறித்து அவதூறு கருத்துகள் எனப் புகார்

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் குடும்பம் குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து விட்டதாக ஹிந்தி நடிகை பாயல் ரோகித்கி மீது ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்த நடிகை செப்டம்பர் 21ஆம் தேதியன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

 

அதில் மோதிலால் நேரு குறித்தும் ஜவகர்லால் நேரு பற்றியும் ஆட்சேபனைக்குரிய பதிவுகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜவஹர்லால் நேருவின் மனைவியின் நடத்தை குறித்து அவதூறு பரப்பப்பட்டு இருப்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

 

லால்பகதூர் சாஸ்திரி மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும் கருத்துக்களையும் நடிகை பற்றி பதிவு செய்திருப்பதாகவும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் 66 மற்றும் 67 ஆகிய பிரிவுகளின் கீழ் நடிகை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Leave a Reply