நீட் ஆள்மாறாட்டத்தில் மேலும் ஒரு மாணவி கைது
நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் மேலும் ஒரு மாணவியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மருத்துவ கல்லூரியில் பயின்ற உதித் சூர்யா அவரது தந்தை வெங்கடேசன் சென்னை மருத்துவ கல்லூரியில் படித்த ராகுல் அவரது தந்தை பேபிஸ் உள்ளிட்ட 8 பேர் இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனிடையே காஞ்சிபுரம் சவீதா மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து வழக்கறிஞரின் மகளான அந்த மாணவி மற்றும் மாணவியின் தாயை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது மாணவி சத்தமிட்டு அழுததால் சிபிசிஐடி அலுவலகம் பூட்டப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




