கோவை மாவட்டம் சூலூர் அருகே ஐந்து வயது பெண் குழந்தை மாயமான விவகாரத்தில் நியாயமான முறையில் விசாரணை நடைபெறவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் இவரது மகள் ஷாமினி கடந்த வாரம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனார் புகாரின்பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை மாயமாகி 7 நாட்கள் கடந்த நிலையில் இதுவரையில் துப்புதல் கிடைக்காததால் குழந்தையை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் கடுமையாக தாக்குவதாகவும் ஒருதலைபட்சமாக விசாரணை நடைபெறுவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே குழந்தையை விரைந்து கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் அளித்தனர்.