நித்யானந்தா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை வைக்கும் கனடா பெண்

இருபதாண்டுகளுக்கு முன் சாதாரண சிறுவனாக திருவண்ணாமலையில் சுற்றித்திரிந்த நித்தியானந்தா தற்போது ஏராளமான ஆண் பெண் சிஷ்யர்களுடன் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் செல்வச்செழிப்புடன் பெங்களூரை அடுத்த பகுதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் பல இடங்களிலும் அவரது அறக்கட்டளைக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன முதலில் பக்தர்களிடம் தன்னை நித்தியானந்தா பரமஹம்சர் என்று அறிமுகப்படுத்தி அருள்வாக்கு கூறி வந்த நித்யானந்தா மீனாட்சி வேடம் முருகன் வேடம் சிவன் வேடம் என்று நடிகர்கள் போல் நாளுக்கு நாள் ஒரு கெட்டப்பை மாற்றி வந்த நிலையில் சிகையலங்கார நிபுணர் மூலம் தலையில் ஜடா முடியை ஒட்டி வைத்துக் கொண்டு தன்னையே கடவுள் பரமசிவன் என்றும் தாம் இருக்கும் இடமே கைலாசம் என்றும் யூட்யூபில் அருள் உரை நிகழ்த்தி வருகிறார்.

 

இந்தநிலையில் நித்யானந்தாவிடம் சிஷ்யையாக இருந்து ருத்ர கன்னியாக துறவறம் ஏற்று நித்தியின் விபரீத ஆன்மீக பணிகளால் அதிருப்தியடைந்து ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய சாரா என்ற கனடா நாட்டு பெண் யூட்யூபில் அவருக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் புகார்களையும் வைத்துள்ளார்.


Leave a Reply