--- --:--:-- --

மகளை கொலை செய்ய முயன்றதாக பெற்றோர் கைது

155902441563059

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மகளை கொலை செய்ய முயன்றதாக பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்னமனூர் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜா கவிதா தம்பதியினர் இவர்களின் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில் இரண்டாவது மகள் போடி அருகே தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

 

இரண்டாவது மகள் போடி அருகே தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் அவர் தனது அக்காள் கணவரின் தங்கை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாணவி தனது செல்போனில் பேசியதாக அவர் தங்கியிருந்த விடுதியின் வார்டன் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து விடுதிக்கு சென்று அவர்கள் தங்கள் மகளை அந்த கிராமத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

 

போடியில் இருந்து சின்னமனூர் வரும் வழியில் மார்க்கையன்கோட்டை அருகே வரும் போது மாணவியின் பெற்றோர் அவரை தரக்குறைவாக பேசியதாகவும் அங்குள்ள முல்லைப் பெரியாறு ஆற்றில் தள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது. உயிருக்குப் போராடி தண்ணீரில் தத்தளித்த மாணவி மரக்கிளை ஒன்றை பிடித்துக்கொண்டு உதவி கூறி கூக்குரலிட்டு கூப்பிட நிலையில் ஆட்டோவில் இருந்த ஒருவர் அவரை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

 

மாணவி அளித்த புகாரின் பேரில் அவரின் பெற்றோர் ராஜா மற்றும் கவிதாவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் மாணவி தேனி அருகே உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon