தலைவர்களை வரவேற்க மலர்கள் காய்கறிகளால் ஆன அலங்கார வளைவு அசத்திய தமிழக அரசு

பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜீ ஜின்பிங் வரவேற்க மாமல்லபுரத்தில் பல வண்ண மலர்களாலும் காய்கறி வகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கண்கவர் மலர்களாலும் கவர்ந்திழுக்கும் காய்கறி வகைகளாலும் மாமல்லபுரத்தில் மூன்று இடங்களில் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் முதலில் பார்வையிட உள்ள அர்ஜுனன் தபசு விளைவுகளில் ஒரு லட்சம் ரோஜா மலர்களால் ஆன அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

 

வெள்ளை சிகப்பு மஞ்சள் நிற ரோஜா மலர்களால் செய்யப்பட்டுள்ள இந்த அலங்காரம் காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. ஐந்து ரதம் பகுதியில் மூன்றரை டன் காய்கறிகளை பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கேரட் குடைமிளகாய் முள்ளங்கி பூசணி என 16 வகையான காய்கறிகள் அலங்காரத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

பல்வேறு கலை நிகழ்ச்சிகளை சீன அதிபர் கடற்கரைக் கோவில் பகுதியிலேயே கண்டு ரசிக்க உள்ளனர். அதனால் அங்கும் ஒரு லட்சம் ரோஜா மலர்களால் ஆன அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. பத்து மீட்டர் உயரத்தில் இந்த மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன. ஊரில் இருந்து வரவழைக்கப்பட்ட புத்தம் புது ரோஜா மலர்களை கொண்டு இன்று காலையில் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர சீன அதிபரும் இந்தியாவின் பிரதமரும் செல்லும் சாலைகளில் இருபுறமும் குலை தள்ளிய வாழை மரங்கள் கட்டி வைக்கப்பட்டுள்ளன.


Leave a Reply