தமிழ்நாட்டிற்கு வந்த சீன அதிபருக்கு மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு
தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள சீன அதிபர் சென்னை விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையம் முதல் சீன அதிபர் தங்கும் கிண்டி ஹோட்டல் வரையிலும் மிகுந்த உற்சாகத்துடன் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது/ சீன அதிபருக்கு தமிழ் நாட்டில் இரண்டு நாட்கள் பயணமாக வந்துள்ளார்.
தலைநகர் பீஜிங்கில் இருந்து இன்று காலை புறப்பட்ட சீன அதிபர் ஸி ஜின்பிங் சீன விமானப்படை விமானம் மூலம் பகல் 1.5 மணி அளவில் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் சீன அதிபருக்கு மிகுந்த உற்சாகத்துடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் தலைமை செயலாளர் டிஐஜி டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகள் வரவேற்றனர்.

சென்னை வந்த சீன அதிபரை வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். தமிழ் நாதஸ்வரம் இசைத்தும் சீன அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பறையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சீன அதிபர் சிரிப்பிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன அதிபர் ஜீ ஜின்பிங் கையை அசைத்து கலைஞர்களை உற்சாகப்படுத்தி கலைஞர்களின் வரவேற்ப்பை ஏற்றார். விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தான் தங்கும் கிண்டி ஐந்து நட்சத்திர விடுதிக்கு புறப்பட்டுச் சென்றார்.
விமான நிலையம் முதல் ஹோட்டல் வரை சீன அதிபருக்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பல்வேறு அமைப்பினர் அரசு கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல இடங்களில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நட்சத்திர விடுதியில் முகப்பில் பள்ளி கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் சிறுமிக்கு வரவேற்பளித்தனர்.
சென்னையில் இருந்து புறப்பட்ட சீன அதிபருக்கு வழிநெடுக 34 இடங்களில் மேளதாளங்கள், ஆட்டம் பாட்டங்களுடன் கோலாகல வரவேற்புகள் அளிக்கப்பட்டது.
சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு பகுதிக்கு வந்த சீன அதிபர் ஜின்பிங்கை வேட்டி, சட்டையில் வந்த பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார்.
அர்ச்சுனன் தபசு பகுதியை ஜிங்பிங்குக்கு சுற்றிக் காட்டிய மோடி, அங்குள்ள சிற்பக்கலையின் தொன்மை மற்றும் சிறப்பு குறித்து ஜின்பிங்குக்கு விளக்கி கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




