நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனம் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த டிடிஎஸ் வரி தொகையை முறையாக செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆகி நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளித்தார். நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு வழங்கிவந்த ஊதியத்திற்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

 

ஆனால் இந்த தொகையை வருமானவரித்துறை குறித்த காலத்திற்குள் செலுத்தவில்லை என்ற புகாரின் பேரில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பினர். இந்த சம்மனை பெறாமல் இருந்ததாக விஷாலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு விஷால் ஆஜராகினர்.

 

சரக்கு மற்றும் சேவை வரி துறையின் ஏன் சம்மனை வேண்டுமென்றே தரவில்லையா அல்லது வேண்டுமென்றே ஆஜராகாமல் இருந்தீர்களா என்று விஷாலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் அரசு தரப்பில் கூறப்படும் இந்த குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக நடிகர் விஷால் தெரிவித்தார். விசாரணை முடிவடைந்ததை அடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Leave a Reply