இலவச செட் டாப் பாக்ஸ் வழங்கக்கோரி இராமநாதபுரம் தாசில்தாரிடம் ஆப்ரேட்டர்கள் புகார் மனு அளித்தனர் !!

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் , தமிழகம் முழுவதும் உள்ள வீடுகளுக்கு இலவச செட் டாப் பாக்ஸ் வழங்கி, குறைந்த கட்டணத்தில் சினிமா, செய்தி மற்றும் கேளிக்கை சானல்களை ஒளிபரப்பு செய்து வருகிறது. கட்டண குறைப்பு, இலவச செட் டாப் பாக்ஸ் பற்றிய தகவல் மக்களை சென்றடைந்துள்ளது.

 

இதனால், திருவாடானை வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை தொடர்பு கொண்டு இலவச செட் டாப் பாக்ஸ் வழங்க வலியுறுத்தி வருகின்றனர். திருவாடானை வட்டத்தில் உள்ள
வீடுகளில், தனியார் கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில்,5 ஆயிரம் இணைப்புகளுக்கு அரசு கேபிள் செட் டாப் பாக்ஸ் தேவைப்படுகிறது.

அரசு செட் டாப் பாக்ஸ் துரிதமாக வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன இராமநாதபுரம் தனி தாசில்தார் செந்தில்குமாரிடம், திருவாடானை வட்ட அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர் அசோசியேஷன் நிர்வாகிகள் கே.கே.ராமலிங்கம், எஸ்.மோகன் தாஸ், சிவராமகிருஷ்ணன், எம்.மணிமாறன்,ராமலிங்கம், டி.மோகன், ரோஜா முருகேசன், வி.ஞானசேகன், வி.மனோகரன், சிவபூர்ண துரை உள்பட 21 பேர் இன்று மனு அளித்தனர்.


Leave a Reply